2014 முதல் 2023 ஆம் ஆண்டு வரை 38,000க்கும் மேற்பட்ட காப்புரிமைகளைத் தாக்கல் செய்து தரவை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவுக்கான காப்புரிமைகளை பெறும் உலக நாடுகளில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது.
இது அமெரிக்காவைச் சொந்தமாகக் கொண்ட கண்டுபிடிப்பாளர்களால் தாக்கல் செய்யப் பட்டதை விட ஆறு மடங்கு அதிகம் ஆகும்.
தரவை உருவாக்கும் AI என்பது ஒரு வகை செயற்கை நுண்ணறிவு ஆகும் என்ற நிலையில் இது பயனர்கள் உரை, படங்கள், இசை, ஆடியோ மற்றும் வீடியோக்கள் போன்ற உள்ளடக்கத்தை உருவாக்க அனுமதிக்கிறது.
புவியியல் ரீதியாக, சீனா 38,210 கண்டுபிடிப்புகளுடன், அமெரிக்கா (6,276), கொரியா குடியரசு (4,155), ஜப்பான் (3,409) மற்றும் இந்தியாவை (1,350) விட மிக முன்னணியில் உள்ளது.