தெலுங்கானா மாநில அரசானது ஜுனோம் வேலி 2.0 (Genome Valley 2.0) என்ற திட்டத்தை வகுப்பதற்காக சிங்கப்பூரை மையமாகக் கொண்ட பொறியியல் மற்றும் ஆலோசனை வழங்கும் நிறுவனமான சுர்பானா ஜுரோங்குடன் (Surbana jurong) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
ஆசியாவில் ஜுனோம் Valley 2.0 என்பது வாழ்க்கை அறிவியல் பற்றிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் மிகப்பெரிய வாழ்க்கை அறிவியல் இலக்குகளுக்காக இந்தியாவின் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட பார்மா உயிரணுத் திரள் (Clusters) ஆகும்.
இந்தியாவின் ஹைதராபாத்தின் சமிர்பேட்டில் 1999-ல் இந்தத் திரள் கருத்தாக்கம் பெற்றது. இது உலக அளவில் பெருமையாக பேசக்கூடிய கட்டமைப்பு வசதிகள் கொண்ட, இந்தியாவின் முதலாவது முறையாக வளர்ச்சி பெற்ற ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திரளாகும்.
Genome valley0 என்பது தன்னிறைவு பெற்ற வாழ்க்கை அறிவியல் சூழல் அமைப்பில் திரள்களை உலகத் தரத்திலான அறிவின் அடிப்படையில் அமைந்த ஒருங்கிணைந்த நடைபாதையை மேம்படுத்தலுக்கான தொலைநோக்குப் பார்வையாகும்.