TNPSC Thervupettagam
December 2 , 2022 594 days 370 0
  • டைம்ஸ் உயர் கல்வி (THE) இதழானது, உலக வேலைவாய்ப்பு பல்கலைக் கழகத் தர வரிசை மற்றும் கணக்கெடுப்பு அறிக்கையினை (GEURS) வெளியிட்டுள்ளது.
  • ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் கூற்றுப் படி, பணிக்கு நியமிக்கும் வகையிலான பட்டதாரிகளை உருவாக்கும் உலகின் சிறந்த 250 பல்கலைக்கழகங்களை இப்பட்டியல் வெளிக்கொணர்கிறது.
  • டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் இந்தப் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது.
  • உலக அளவில், மொத்தம் 44 நாடுகள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
  • சமீபத்தில் வெளியான அறிக்கையில், மொத்த நிறுவனங்களின் எண்ணிக்கையில் இந்தியா 13வது இடத்தில் உள்ளது.
  • சுவீடன், ஹாங்காங், இத்தாலி மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளை விட இந்தியா முன்னணியில் உள்ளது.
  • பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்விக் கழகமானது, 58வது இடத்தைப் பெற்றுள்ள நிலையில், இது இந்தியாவின் இரண்டாவது சிறந்த செயல்திறன் கொண்ட நிறுவனம் ஆகும்.
  • இது மூன்று இடங்கள் முன்னேறி அதன் தரவரிசையை மேம்படுத்தியுள்ளது.
  • அதைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டில் 97வது இடத்தில் இருந்த மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் தற்போது 72வது இடத்தில் உள்ளது.
  • முதல் 200 இடங்களில் ஐந்து இந்திய நிறுவனங்களும், முதல் 250 இடங்களில் மொத்தம் ஏழு நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன.
  • அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் 154வது இடத்தையும், காரக்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் 155வது இடத்தையும் பெற்று உள்ளன.
  • இப்பட்டியலில் இடம் பெற்ற முதல் ஐந்து பல்கலைக்கழகங்களில் நான்கு அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்  ஆகும்.
  • இதில் மொத்தம் 55 அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் முதல் 250 இடங்களில் இடம் பெற்றுள்ளன.
  • பிரான்சு மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 18 மற்றும் 14 பல்கலைக் கழகங்கள் முறையே முதல் 250 இடங்களில் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்