இந்திய வானியலாளர்கள் GG Tau A எனப்படும் ஒரு தனித்துவமான மும்மை நட்சத்திர அமைப்பைக் கண்டறிந்துள்ளனர்.
இது பூமியிலிருந்து தோராயமாக 489 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
புதிய கிரகங்களின் தோற்ற இடமாக அறியப்படும் இந்தப் பகுதியில், வாயு மற்றும் தூசியால் ஆன சுழலும் வளையமான ஒரு புரோட்டோபிளானட்டரி (கிரக உருவாக்கம் சார்ந்த) வட்டு உள்ளது.
இவ்வட்டின் "நடுத்தர தளம்" ஆனது, கார்பன் மோனாக்சைட்டின் உறைநிலையை விட மிகக் குறைவான, 12K முதல் 16K வரையிலான குறைந்த வெப்பநிலையைக் கொண்டு இருப்பது கண்டறியப்பட்டது.
GG Tau A அமைப்பு ஆனது மும்மை நட்சத்திர அமைப்பின் ஒரு பகுதியாகும் என்பதோடு இது 1 முதல் 5 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது.