கல்விசார் வலையமைப்புகளின் உலகளாவிய முன்னெடுப்பின் (GIAN) நான்காவது கட்டத்தை மீண்டும் தொடங்க கல்வி அமைச்சகம் தயாராகி வருகிறது.
GIAN தொடங்கப்பட்டதில் இருந்து வெளிநாட்டு ஆசிரியர்களின் பயணம் மற்றும் மதிப்பூதியத்தை ஆதரிப்பதற்காக குறைந்தபட்சம் 126 கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட்டுள்ளது.
இந்தியாவிற்கு வருகை தந்த கல்வியாளர்களில் 41.4% (668) பேர் அமெரிக்க நாட்டினைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மீதமுள்ளவர்கள் ஐக்கியப் பேரரசு (143), ஜெர்மனி (93), கனடா (89), பிரான்சு (56), இத்தாலி (58), நோர்டிக் நாடுகள் (47), சீனா, ஜப்பான் மற்றும் தாய்வான் (63), ஆசியான் (42) மற்றும் பிற (259) நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் ஆவர்.
இதன் மூலம் 72,000 இந்திய மாணவர்கள் நேரடியாக பயனடைந்தனர்.