GlobE Network அமைப்பிற்கான வழிநடத்தல் குழு
October 3 , 2024
51 days
138
- GlobE Network எனப்படும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு அமைப்பின் 15 உறுப்பினர்களைக் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் இந்தியா ஓர் இடத்தைப் பெற்றுள்ளது.
- உள்துறை அமைச்சகம் ஆனது GlobE Network அமைப்பிற்கான இந்தியாவின் மத்திய ஆணையமாக செயல்படுகிறது.
- மத்தியப் புலனாய்வு பிரிவு (CBI) மற்றும் அமலாக்க இயக்குநரகம் (ED) ஆகியவை இதற்கான உறுப்பினர் ஆணையங்களாக செயல்படுகின்றன.
- GlobE Network என்ற அமைப்பானது 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஆதரவுடன் G-20 அமைப்பிலிருந்து ஒரு முன்னெடுப்பாக உருவானது.
- GlobE Network ஆனது அதிகாரப்பூர்வமாக 2021 ஆம் ஆண்டு ஜூன் 03 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.
- இந்த வலையமைப்பில் 121 உறுப்பினர் நாடுகள் மற்றும் 219 உறுப்பினர் ஆணையங்கள் உள்ளன.
Post Views:
138