இஸ்ரோ நிறுவனமானது, மண்ணின் ஈரப்பதம், மேற்பரப்பு வெள்ளப் பெருக்கு மற்றும் கடல் மேற்பரப்பு காற்று மற்றும் அலை சார் அளவீடுகள் பற்றிய தரவுகளைச் சேகரிப்பதற்கான செயற்கைக்கோள் நுட்பத்தின் செயல்விளக்க செயல்முறையினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
இது பூமியிலிருந்து சுமார் 475 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள செயற்கைக்கோள் அடிப்படையிலான உணர்வியினைப் பயன்படுத்தியது.
இந்தப் புதிய கருவியானது GNSS- ரிஃப்ளெக்டோமெட்ரி – பிரதிபலிப்பு மானி- (GNSS-R) என அழைக்கப்படுகிறது.
சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோவின் EOS-08 செயற்கைக்கோளில் இந்தச் செயலை மேற்கொள்ளக்கூடிய ஒரு கருவியும் பொருத்தப் பட்டது.