“சமுதாயத்தின் தலைவர்களாக நிகழ்தளத்திற்குச் செல்பவர்கள்” (Going Online as Leaders - GOAL) என்பது ஏழை இளம் பழங்குடிப் பெண்களுக்காக முகநூலால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
இது இந்தியா முழுவதிலும் உள்ள பழங்குடிச் சிறுமிகளை கிராம அளவில் தங்கள் சமூகங்களின் டிஜிட்டல் இளம் தலைவர்களாக மாற்ற அவர்களை ஊக்குவித்தல், வழிகாட்டுதல் மற்றும் புத்துணர்ச்சி ஊட்டுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமீபத்தில் மத்தியப் பழங்குடி விவகாரங்கள் துறை அமைச்சகம் முகநூலுடன் இணைந்து இந்தத் திட்டத்தின் 2வது கட்டத்தைத் தொடங்கியுள்ளது.