TNPSC Thervupettagam

GPI வழித்தொடர் அமைப்பு

April 1 , 2018 2301 days 696 0
  • பாதுகாப்பான நிதியியல் செய்திகள் சேவை வழங்குநரான (Secure Financial Messaging Service Provider) SWIFT, வங்கிகள் அவைகளுடைய உலகளாவியப் பரிவர்த்தனையை எல்லா நேரங்களிலும் கண்காணிக்கவும், பணம் செலுத்தும் செயல்பாடுகளை (Payment activity) தொடர்ந்து கண்காணிக்கவும், வங்கிகளுக்கு உதவி புரியும் வகையில் GPI (Global Payment Innovation) வழித் தொடர் அமைப்பை (GPI Tracker System) விரிவுபடுத்தியுள்ளது.
  • இந்த விரிவுப்படுத்தப்பட்ட GPI வழித்தொடர் அமைப்பு அனைத்து வகையான, வலைப்பின்னலில் அனுப்பப்படும் கட்டணக் குறிப்புகளை (Payment instructions) உள்ளடக்குவதுடன் (Cover) அவைகளின் ஒட்டு மொத்த கட்டண செயல்பாடுகளை காணும் வகையில் வழிவகை செய்கிறது.
  • நவம்பர் 2018 முதல், இந்த GPI வழித்தொடர் அமைப்பானது, அதாவது end-to-end பரிவர்த்தனைக் குறிப்பானது, 200க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள 11,000 SWIFT வாடிக்கையாளர்களுக்கிடையில் எடுத்துச் செல்லப்படும் கட்டணக் குறிப்புகளை உள்ளடக்கும்.
  • SWIFT GPI ஆனது மே 2017ல் தொடங்கப்பட்டது.

SWIFT (Society for World Interbank Financial Telecommunication System) தளம்

  • SWIFT உலகிலுள்ள வங்கிகளுக்கிடையேயான நிதியியல் தொலைத் தொடர்பு அமைப்புக்கான சங்கம்.
  • உலகளாவிய நிதியியல் செய்தியனுப்பும் சேவையான SWIFT, உலகிலுள்ள நிதியியல் நிறுவனங்கள் நிதியியல் பரிவர்த்தனையைப் பற்றிய செய்திகளை பாதுகாப்பான, தரமான மற்றும்  நம்பகமான சூழ்நிலையில் அனுப்பவும் & பெறவும் நிதியியல் நிறுவனங்களை  இயலச் செய்கிறது.
  • பெல்ஜியத்திலுள்ள லா ஹீப்லேவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள SWIFT, 1973ஆம் நிறுவப்பட்டது. SWIFT, எல்லை தாண்டிய நிதியியல் பரிவர்த்தனைகள் தொடர்பான செய்திகளை அனுப்புவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
  • பெல்ஜிய சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட, கூட்டுறவுச் சங்கமான (SWIFT பங்குதாரர்களால் உரிமை கொள்ளப்பட்டது இச்சங்கம்) இது உலக அளவில் தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்