எலான் மஸ்க் நடத்தும் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் GRACE-FO எனும் நாசாவின் இரு செயற்கைக் கோள்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளது.
பனி உருகுதல் மற்றும் நீரின் பெயர்வு போன்ற புவியினுடைய நீர் சுழற்சியை கண்காணிப்பதற்காக இந்த செயற்கைக் கோள் அனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்காவின், கலிபோர்னியாவில் உள்ள வன்டென்பெர்க் விமானப் படைத் தளத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பால்கான் 9 இராக்கெட் மூலம் இந்த செயற்கைக் கோள் ஏவப்பட்டுள்ளது.
GRACO-FO செயற்கைக் கோள் திட்டமானது அமெரிக்காவின் நாசாவிற்கும், புவி அறிவியலுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையத்திற்கும் இடையேயான கூட்டுத் திட்டமாகும்.
2002 முதல் 2017ஆம் ஆண்டு வரை புவியினுடைய புவியீர்ப்பு விசைக் களத்தில் நிகழ்ந்த மாற்றத்தை அளவிட்டு அதன் மூலம் புவியினுடைய நீர் மற்றும் பனியினை வரைபடமிட்ட அசலான GRACE திட்டத்தின் பின்தொடரல் திட்டமே GRACE-FO திட்டமாகும்.