அமெரிக்காவின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) மற்றும் நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழகம் ஆகியோரால் ஒரு புதிய செயற்கைக்கோள் அடிப்படையிலான, மண்ணின் ஈரப்பதம் மற்றும் நிலத்தடி நீர் ஈரப்பத நிலைகளைக் காட்டும் வாராந்திர உலகளாவிய வரைபடங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.
புவி ஈர்ப்பு விசை மீட்பு மற்றும் காலநிலை பரிசோதனை பின்தொடர்தல் (The Gravity Recovery and Climate Experiment Follow-on/GRACE-FO) என்ற திட்டமானது நாசா மற்றும் ஜெர்மனியின் புவியியலுக்கான ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சித் திட்டமாகும்.
இது பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் ஈர்ப்பு விசையின் மாறுபாடுகளை அளவிடுகின்றது. மேலும் இது ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஈர்ப்புப் புலத்தின் ஒரு புதிய வரைபடத்தை உருவாக்குகின்றது.