அக்டோபர் 23 ஆம் தேதியன்று 306 என்ற காற்றுத் தரக் குறியீட்டுடன் (AQI) டெல்லியில் காற்றின் தரமானது, ‘மிகவும் மோசமான’ நிலையை அடைந்துள்ளது.
இரண்டாம் நிலை அல்லது தரப்படுத்தப்பட்ட எதிர் நடவடிக்கை செயல் திட்டத்தின் (GRAP) மிகவும் மோசமான நிலையானது டெல்லியின் தேசிய தலைநகர் பகுதி முழுவதும் உடனடியாக அமலுக்கு வந்தது.
GRAP திட்டத்தின் முதல் நிலை ஆனது டெல்லியின் தேசிய தலைநகர் பகுதி முழுவதும் அக்டோபர் 06 ஆம் தேதியன்று அமலாக்கப்பட்டது.
தரப்படுத்தப்பட்ட எதிர் நடவடிக்கை செயல் திட்டம் (GRAP) என்பது பொதுவாக குளிர் காலத்தில் டெல்லியின் தேசிய தலைநகர் பகுதி முழுவதும் செயல்படுத்தப் படுகின்ற காற்று மாசுபாடு எதிர்ப்பு நடவடிக்கைகளின் தொகுப்பாகும்.
தரப்படுத்தப்பட்ட எதிர் நடவடிக்கை என்ற செயல்திட்டத்தின் கீழ், அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகிறது.
காலாவதியான வாகனங்களை இயக்குவதற்கான பல கடுமையானக் கட்டுப்பாடுகள் மற்றும் காற்றுத் தரக் குறியீடு 200 என்பதினைத் தாண்டி மாசு வெளியிடும் தங்கும் விடுதிகள், உணவகங்களில் நிலக்கரி மற்றும் விறகுகளைப் பயன்படுத்துவதற்கான தடைகள் ஆகியவையும் இதில் அடங்கும்.
தரப்படுத்தப்பட்ட எதிர் நடவடிக்கை செயல் திட்டத்தின் நான்கு வெவ்வேறு நிலைகள்.
'மோசமான' காற்றுத் தரக் குறியீடு (201-300) பதிவாகும் போது நிலை 1 செயல் படுத்தப் படுகிறது;
'மிக மோசமான' காற்றுத் தரக் குறியீடு (301-400) பதிவாகும் போது நிலை 2;
'கடுமையான' காற்றுத் தரக் குறியீடு (401-450) பதிவாகும் போது நிலை 3; மற்றும்
450க்கு மேல் ‘மிகக் கடுமையான’ காற்றுத் தரக் குறியீடு பதிவாகும் போது நிலை 4 செயல்படுத்தப்படுகிறது.