GRAPES-3 பரிசோதனையானது காஸ்மிக்-கதிரின் புரோட்டான் அலைக்கற்றையில் சுமார் 166 டெரா-எலக்ட்ரான்-வோல்ட் (TeV) ஆற்றல் மட்டத்தில் ஒரு புதிய பண்புக் காணப்படுவதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது 50 TeV ஆற்றல் மட்டத்திலிருந்து ஒரு பீட்டா எலக்ட்ரான்-வோல்ட் (PeV) வரையிலான ஆற்றல் அளவீட்டு வரம்பைக் கொண்டுள்ளது.
இந்தக் கண்டுப்பிடிப்பானது, காஸ்மிக் கதிரின் தோற்றம், அவற்றின் முடுக்க செயல் முறைகள் மற்றும் பால்வெளி அண்டத்திற்குள் அவை எவ்வாறு நகர்கின்றன என்பது பற்றிய நமது புரிதலில் சாத்தியமிகு மாற்றத்தை அறிமுகப்படுத்துகிறது.
ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட காஸ்மிக் கதிர்கள், பேரண்டத்தின் மிகவும் ஆற்றல் வாய்ந்த துகள்களைப் பிரதிபலிக்கின்றன.