TNPSC Thervupettagam
June 19 , 2024 161 days 210 0
  • ஜவுளி அமைச்சகத்தின் அதிகாரமளிக்கப்பட்ட திட்டக் குழுவானது, GREAT திட்டத்தின் கீழ் 7 புத்தொழில் நிறுவன முன்மொழிதல்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • மத்திய அரசானது புத்தொழில் நிறுவனம் ஒன்றிற்கு 18 மாதங்களுக்கு மேலான கால கட்டத்திற்கு அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்குகிறது.
  • GREAT என்பது தொழில்நுட்ப ஜவுளித் துறையில் (செயல்பாட்டு நோக்கங்களுக்காக வடிவமைக்கப்படும் ஜவுளிப் பொருட்கள்) ஆர்வமுள்ள கண்டுபிடிப்பாளர்களின் ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவுக்கான மானியம் என்பதைக் குறிக்கிறது.
  • இது தேசியத் தொழில்நுட்ப ஜவுளித் திட்டத்தின் (NTTM) ஒரு பகுதியாகும்.
  • தொழில்நுட்ப ஜவுளித் துறையில் இந்தியாவின் திறன் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி புதுமையான தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களைச் சந்தையில் அறிமுகப்படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்