TNPSC Thervupettagam
September 2 , 2024 85 days 155 0
  • 8வது அதிகாரமளிக்கப்பட்ட திட்டக் குழு (EPC) ஆனது, ஒவ்வொன்றிற்கும் தோராயமாக 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மானியத்துடன் 4 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது ‘தொழில்நுட்ப ஜவுளித் துறையில் ஈடுபாடு மிக்க கண்டுபிடிப்பாளர்களுக்கு ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான மானியம்’ (GREAT) திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
  • இது தொழில்நுட்ப ஜவுளித் துறைப் படிப்புகளை அறிமுகப்படுத்துவதற்காக 5 கல்வி நிறுவனங்களுக்கு தோராயமாக 20 கோடி ரூபாய் மானியத்திற்கும் ஒப்புதல் அளித்து உள்ளது.
  • இது ‘தொழில்நுட்ப ஜவுளித்துறையில் கல்வி நிறுவனங்களை இயக்குவதற்கான பொது வழிகாட்டுதல்களின்’ கீழ் உருவாக்கப்பட்டது.
  • அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனத் திட்டங்கள் தொகுப்புகளானது, நிலையான ஜவுளி மற்றும் திறன் மிகு (மின்னணு சார்ந்த அம்சங்கள் கொண்ட) ஜவுளி அமைப்புகள் ஆகியவற்றின் முக்கிய மூலோபாயப் பகுதிகளில் மிகப் பெரும் கவனம் செலுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்