TNPSC Thervupettagam

GROW இணைய தளம் மற்றும் அறிக்கை

April 4 , 2024 106 days 189 0
  • நிதி ஆயோக் அமைப்பானது, வேளாண் காடு வளர்ப்பு மூலம் தரிசு நிலத்தை பசுமை மயமாக்குதல் மற்றும் புணரமைத்தல் (GROW) அறிக்கை மற்றும் இணைய தளத்தினை சமீபத்தில் தொடங்கியுள்ளது.
  • தேசிய அளவிலான முன்னுரிமைக்காக கருப்பொருள் சார்ந்த தரவுத் தொகுப்புகளைப் பயன்படுத்தி வேளாண் காடு வளர்ப்பு ஏற்புநிலைக் குறியீடானது (ASI) உருவாக்கப் பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது, பசுமைமயமாக்கல் மற்றும் புணரமைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக அரசுத் துறைகள் மற்றும் தொழிற்துறைகளுக்கு உதவும் வகையில் மாநிலம் மற்றும் மாவட்ட வாரியான பகுப்பாய்வுகளை வழங்குகிறது.
  • "வேளாண் காடு வளர்ப்பு மூலம் தரிசு நிலத்தைப் பசுமைமயமாக்குதல் மற்றும் புணரமைத்தல் (GROW) என்ற இணைய தளமானது மாநில மற்றும் மாவட்ட அளவிலான தரவுகளுக்கான பொதுப் பயன்பாட்டு அணுகலை வழங்குகிறது.
  • GROW முன்னெடுப்பானது நாட்டின் உறுதிப்பாடுகளுடன் ஒத்துப் போகிறது.
    • 2030 ஆம் ஆண்டிற்குள் சுமார் 26 மில்லியன் ஹெக்டேர் அளவிலான தரமிழந்த நிலத்தினை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
    • 2.5 முதல் 3 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடுக்கு இணையான கூடுதல் கார்பன்  உள்ளீர்ப்பு அமைப்புகளை (காடுகள்) உருவாக்குதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்