நிதி ஆயோக் அமைப்பானது, வேளாண் காடு வளர்ப்பு மூலம் தரிசு நிலத்தை பசுமை மயமாக்குதல் மற்றும் புணரமைத்தல் (GROW) அறிக்கை மற்றும் இணைய தளத்தினை சமீபத்தில் தொடங்கியுள்ளது.
தேசிய அளவிலான முன்னுரிமைக்காக கருப்பொருள் சார்ந்த தரவுத் தொகுப்புகளைப் பயன்படுத்தி வேளாண் காடு வளர்ப்பு ஏற்புநிலைக் குறியீடானது (ASI) உருவாக்கப் பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது, பசுமைமயமாக்கல் மற்றும் புணரமைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக அரசுத் துறைகள் மற்றும் தொழிற்துறைகளுக்கு உதவும் வகையில் மாநிலம் மற்றும் மாவட்ட வாரியான பகுப்பாய்வுகளை வழங்குகிறது.
"வேளாண் காடு வளர்ப்பு மூலம் தரிசு நிலத்தைப் பசுமைமயமாக்குதல் மற்றும் புணரமைத்தல் (GROW) என்ற இணைய தளமானது மாநில மற்றும் மாவட்ட அளவிலான தரவுகளுக்கான பொதுப் பயன்பாட்டு அணுகலை வழங்குகிறது.
GROW முன்னெடுப்பானது நாட்டின் உறுதிப்பாடுகளுடன் ஒத்துப் போகிறது.
2030 ஆம் ஆண்டிற்குள் சுமார் 26 மில்லியன் ஹெக்டேர் அளவிலான தரமிழந்த நிலத்தினை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2.5 முதல் 3 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடுக்கு இணையான கூடுதல் கார்பன் உள்ளீர்ப்பு அமைப்புகளை (காடுகள்) உருவாக்குதல்.