TNPSC Thervupettagam

GROWTH - India தொலை நோக்கியின் முதலாவது அறிவியல் கண்காணிப்பு

November 25 , 2018 2192 days 703 0
  • லடாக்கின் ஹென்லியில் உள்ள இந்திய வானியல் ஆய்வு மையத்தில் அமைந்துள்ள நோவா வெடிப்பை ஆய்வு செய்யும் திட்டத்தின் தொடர்ச்சியான, 0.7 மீட்டர் அளவுடைய GROWTH - India தொலை நோக்கியானது முதன்முறையாக தனது கண்டுபிடிப்பைப் பதிவு செய்து இருக்கின்றது.
  • GROWTH - India என்பது பேரண்டத்தில் மாறுநிலை நிகழ்வுகளை கண்காணிப்பதற்காக பல நாடுகள் இணைந்து செயல்படுத்தும் முன்முயற்சியான மாறுநிலை நிகழ்வுகள் நிகழ்வதை கண்காணிக்கும் உலக நிலை உணர்த்தி (GROWTH - Global Relay of Observatories Watching Transients Happen) என்ற அமைப்பின் ஒரு பகுதியாகும்.
  • அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஜெர்மனி, தைவான், ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்த முன்முயற்சியில் பங்கு பெற்றுள்ள நிறுவனங்களாகும்.
  • GROWTH - India என்பது அண்ட நிகழ்ச்சிகளை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது முற்றிலும் முழுவதுமான எந்திரவியல் (Robotics) தொலைநோக்கியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்