கோயம்புத்தூர் இரயில்வே சந்திப்பில் இரயில்வே துறை ADGP யான சைலேந்திரபாபு “GRP (Government Railway Police) உதவி செயலியை” அறிமுகப்படுத்தினார்.
இதன் மூலம் இரயில் பயணிகள் அரசு இரயில்வே காவல்துறை (Government Railway Police), ரயில்வே பாதுகாப்புப் படை (Railway Protection Force) ஆகியோரின் உதவியைப் பெறலாம்.
ரயில்வே பயணிகள் எந்தவொரு சந்தேகத்திற்கிடமான பொருட்களின் புகைப்படத்தினையும் இந்த செயலி மூலம் பகிர்ந்து கொள்ள முடியும்.