TNPSC Thervupettagam
April 26 , 2023 581 days 293 0
  • நாசாவின் ஆராய்ச்சியாளர்கள் GRX-810 எனப்படும் அதிக வலிமை கொண்ட, அதிக வெப்பநிலை எதிர்ப்புத் திறன் கொண்ட ஒரு புதிய உலோகக் கலவையை உருவாக்கி உள்ளனர்.
  • GRX-810 உலோகக் கலவையானது முதன்மையாக நிக்கல், கோபால்ட் மற்றும் குரோமியம் ஆகியவற்றால் ஆனது.
  • தற்போதைய இந்த அதிநவீன, முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட அதி உலோகக் கலவையின் வெப்பநிலை எதிர்ப்புத் திறன் ஆனது 1,093 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது.
  • இது சாதாரண உலோகக் கலவைகளை விட 1,000 மடங்கு அதிகம் நீடித்து உழைக்கக் கூடியது.
  • இது விமானம் மற்றும் விண்வெளி ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் கூறுகள் மற்றும் பாகங்களின் வலிமை மற்றும் கடினத் தன்மையை அதிகரிக்கச் செய்ய உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்