TNPSC Thervupettagam
November 27 , 2024 26 days 87 0
  • GSAT-N2 அல்லது GSAT-20 என்பது 4,700 கிலோ எடையுள்ள செயற்கைக் கோளான இது இந்தியாவின் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விண் ஏவு வாகனங்களின் செலுத்தும் திறனை விஞ்சும் வகையிலானதாகும்.
  • இதனை விண்ணில் ஏவுவதற்கு என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ஏவு வாகனமானது அமெரிக்காவின் கேப் கனவரல் என்ற இடத்தில் பயன்படுத்தப்பட்டது.
  • இந்த செயற்கைக்கோள் ஆனது சுமார் 14 ஆண்டுகள் விண்ணில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
  • இது இந்தியா முழுவதும் மற்றும் அதன் தொலைதூரப் பகுதிகளிலும் அத்தியாவசிய இணையம் மற்றும் தகவல் தொடர்புச் சேவைகளை வழங்கும்.
  • இது இந்தியப் பகுதி முழுவதும் அகலப்பட்டை அலைவரிசை மற்றும் விமானப் போக்குவரத்தின் போதான இணைய சேவை இணைப்பை மேம்படுத்தும்.
  • ஒரு இந்திய விண்வெளி வீரரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) அனுப்பச் செய்வதற்காக ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் இஸ்ரோ ஆகியவை சுமார் 60 மில்லியன் டாலர் மதிப்பிலான மற்றொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்