TNPSC Thervupettagam
January 19 , 2020 1646 days 594 0
  • இந்தியாவின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான GSAT-30  ஆனது புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதியன்று பிரெஞ்சு கயானாவின் கொரூ ஏவுதளத்திலிருந்து ஏரியன் -5 VA-251 என்ற விண்கலன் மூலம் வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவப்பட்டது.
  • C மற்றும் Ku பட்டைகளில் புவி சுற்றுப்பாதையில் இருந்து தகவல் தொடர்பு சேவைகளை வழங்குவதற்காக இது இஸ்ரோவின் மேம்படுத்தப்பட்ட I-3K தொடர் கட்டமைப்பின் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • 3357 கிலோ எடையுள்ள இந்த GSAT-30 செயற்கைக் கோளானது இன்சாட் - 4A விண்கலச் சேவைகளுக்கு மாற்றாக மேம்பட்ட பாதுகாப்புடன் செயல்பட உள்ளது.
  • இந்த செயற்கைக் கோளானது Ku பட்டைகளின் வரம்பு எல்லைகளில் இருக்கும் இந்திய நிலப்பரப்பு மற்றும் இந்தியத் தீவுகள் ஆகிய பகுதிகளுக்குச் சேவைகளை வழங்குகின்றது. மேலும் C பட்டைகளின் வரம்பு எல்லைகளில் இருக்கும் வளைகுடா நாடுகள், ஏராளமான ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளுக்கு இது மேம்பட்ட சேவைகளை வழங்குகின்றது.
  • சுற்றுப்பாதையின் உள்ளே செயல்படக் கூடிய GSAT-30 செயற்கைக் கோளின் ஆயுட்காலமானது 15 ஆண்டுகளுக்கும் அதிகமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்