TNPSC Thervupettagam

GSAT 31 தகவல் தொடர்பு செயற்கைக் கோள்

February 8 , 2019 1990 days 665 0
  • பிரஞ்சு கயானாவிலிருந்து  ஐரோப்பிய விண்வெளி சேவை வழங்குநரான ஏரியன்ஸ்பேசின் ராக்கெட் மூலம் (ஏரியன் 5) இந்தியாவின் சமீபத்திய தகவல் தொடர்பு செயற்கைக் கோள் GSAT 31 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
  • G-SAT-31 என்பது நாட்டின் 40வது தகவல் தொடர்பு செயற்கைக் கோளாகும். இது இஸ்ரோவின் மேம்படுத்தப்பட்ட I-2k மோட்டார் என்பதின் மீது வடிவமைக்கப் பட்டிருக்கின்றது. இஸ்ரோவின் மேம்படுத்தப்பட்ட ‘I-2k Bus’ என்ற இந்த வகை மோட்டார்களின் திறன்களை அது அதிகபட்சமாக பயன்படுத்திக் கொள்ளும்.

  • இந்தச் செயற்கைக் கோள் புவிநிலைச் சுற்றுவட்டப் பாதையில் குயு-பாண்ட் டிரான்ஸ் பாண்டரின் திறனை அதிகப்படுத்தும். மேலும் இது மிக விரைவில் காலாவதியாகக் கூடிய சில செயற்கைக் கோள்களை (இன்சாட்) மாற்றி அதற்குப் பதிலாக அந்த இடத்தில் பணியாற்றிட இருக்கின்றது.
  • GSAT 31 என்பது விசாட் (VSAT) வலைப் பின்னல்களுக்கான ஆதரவு, தொலைக்காட்சி பதிவேற்றங்கள், டிஜிட்டல் செயற்கைக்கோள் செய்திகள் சேகரிப்பு, DTH தொலைக்காட்சி சேவை, திரும்பி வரும் செல்லுலாரின் இணைப்பு போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கும் உபயோகப்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்