இந்தியப் புவியியல் ஆய்வு மையம் (GSI) ஆனது, சமீபத்தில் அதன் 175வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது.
இந்த நிகழ்வின் போது, களம் சார் தரவு கையகப்படுத்துதல் செயலி மற்றும் 'புவிராசத்' எனப்படும் புவி சார்ந்த பாரம்பரியச் செயலி என இரண்டு குறிப்பிடத்தக்க எண்ணிம முயற்சிகளை அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்த முன்னெடுப்புகள் ஆனது, தரவுச் சேகரிப்பு செயல்திறனை மேம்படுத்துவதையும் இந்தியாவின் வளமான புவி சார் பாரம்பரியம் குறித்ததொரு பெரும் விழிப்புணர்வை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.