TNPSC Thervupettagam
April 19 , 2019 1920 days 595 0
  • மத்திய அமைச்சரவை தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் புவியிணக்கச் செயற்கைக் கோள் ஏவுவாகனத் திட்டத்தின் நான்காவது நிலையின் தொடர்ச்சிக்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது.
  • GSLV (Geosynchronous Satellite Launch Vehicle) யின் இந்த நான்காவது காலக்கட்டம் 2021-2024 காலக் கட்டத்திற்குள் 5 ஏவுவாகனப் பயணங்களைக் கொண்டிருக்கின்றது.
  • இந்தத் திட்டத்தின் தொடர்ச்சியானது ஆண்டிற்கு இரண்டு ஏவுதல்கள் என்ற வரிசையில் செயற்கைக் கோள்களை ஏவி விடுவதற்கான தேவையை நிவர்த்தி செய்யும்.
  • GSLVயின் தொடரல் திட்டத்திற்கு முதலில் 2003-ம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • GSLV தொடரல் திட்டம் அதிமுக்கிய செயற்கைக்கோள் சேவைகளுக்கும் இந்தியாவில் எதிர்கால விண்வெளித் திட்டங்களுக்கும் செலுத்தப்பட வேண்டிய செயற்கைக் கோள்களின் தேவையை நிவர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்