தேசிய தலைநகர் புதுதில்லியில் நடைபெற்ற GST (Goods & Service Tax) சபையின் 29 வது சந்திப்பில் இலக்கமுறை பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக பணச்சலுகைகளுக்கு அச்சபை ஒப்புதல் அளித்துள்ளது.
GST சபையின் சந்திப்பு இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் அவர்களால் தலைமை தாங்கப்பட்டது.
Rupay மற்றும் BHIM தளங்களை பயன்படுத்தி வர்த்தகர் மற்றும் நுகர்வோருக்கு இடையேயான இலக்கமுறை பணபரிவர்த்தனைகளை மேற்கொள்வோருக்கு பரிவர்த்தனைக்கு ரூ.100 என்ற வீதத்தில் 20% பணம் திரும்ப அளிக்கப்படும் என்று GST சபை அறிவித்துள்ளது.