GST வரி விகித குறைப்பு - 88 பொருட்கள்
July 26 , 2018
2315 days
721
- சுகாதாரத் துணிகள் (தற்பொழுது 12% வரி) மற்றும் செறிவூட்டப்பட்ட பால் (தற்பொழுது 18% வரி) ஆகியன வரிவிதிப்பிலிருந்து விலக்கு பெற்றுள்ளன.
- சலவை இயந்திரம், குளிர்சாதனப் பெட்டி, 25 அங்குலம் வரையிலான தொலைக்காட்சிப் பெட்டிகள், தூசி அகற்றும் கருவி, வாசனை திரவியங்கள், அறவை இயந்திரங்கள், மிக்சர்ஸ், தண்ணீர் குளிர்விப்பான், லித்தியம்-அயர்ன் பேட்டரிகள் மற்றும் பெயிண்ட்ஸ் ஆகியவை 28% படிநிலையிலிருந்து 18% படிநிலைக்கு குறைக்கப்பட்ட பொருட்கள் ஆகும்.
- ரூ.1000 மதிப்புள்ள வழக்கமாக பயன்படுத்தப்படும் காலணிகளுக்கு 5% அளவில் வரி விதிக்கப்படும்.
- எண்ணெய் நிறுவனங்களுக்கான எத்தனால் எண்ணெய்க்கு முந்தைய 18% நிலையிலிருந்து 5% வரி நிலைக்கு மாற்றப்படும்.
- கைப்பைகள் மற்றும் கையினால் செய்யப்பட்ட விளக்குகள் மீதான GST வரி 12% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
- இந்தப் புதிய GST விகிதங்கள் ஜூலை 27லிருந்து நடைமுறைக்கு வரும்.
Post Views:
721