மத்திய மறைமுக மற்றும் சுங்க வரிகள் மன்றம் (Central Board of Indirect Taxes and Customs - CBIC )நுகர்வோர் நலன்களை பாதுகாத்திட ‘GST Verify’ என்ற செயலியை உருவாக்கி வெளியிட்டு இருக்கின்றது.
இந்த செயலியானது நுகர்வோரிடமிருந்து GST வரியை வசூலிக்கும் ஒரு நபர் அவ்வரியை வசூலிப்பதற்கு தகுதியானவரா இல்லையா என்று சரிபார்க்கும்.
மேலும் இச்செயலி GST வரியை வசூலிக்கும் தனிநபர்/நிறுவனத்தை பற்றிய தகவல்களையும் அளிக்கும்.