GST மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்திற்கான புதிய விதிகள்
April 29 , 2025 13 hrs 0 min 18 0
இந்திய அரசாங்கம் ஆனது, சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாய (செயல்முறை) விதிகளை அறிவித்துள்ளது.
இனி விண்ணப்பங்களைக் கட்டாயமாக இணைய வழியில் தாக்கல் செய்வதற்கும், கலப்பு முறையில் விசாரணைகளை நடத்துவதற்கும் இது வழி வகை செய்கிறது.
விண்ணப்பதாரர் நண்பகல் 12:00 மணிக்கு முன் தாக்கல் செய்யும் எந்தவொரு அவசர விவகாரமும், அந்த விண்ணப்பம் ஆனது அனைத்து வகையிலும் முழுமையானதாக இருந்தால், அதற்கு அடுத்த வேலை நாளில் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முன் விசாரணைக்காகப் பட்டியலிடப்படும் என்றும் இந்த விதிகள் கூறுகின்றன.
விதிவிலக்கான சில சூழல்களில், மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் அல்லது தலைவரின் குறிப்பிட்ட ஒரு அனுமதியுடன், அது மறுநாள் பட்டியலிடப்படுவதற்காக, மதியம் 12:00 மணிக்குப் பிறகு ஆனால் பிற்பகல் 3:00 மணிக்கு முன் விண்ணப்பத்தைப் பெறலாம்.
2025 ஆம் ஆண்டின் சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாய விதிகளின் படி (நடைமுறை), மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் நிர்வாக அலுவலகங்கள் இனி அனைத்து வேலை நாட்களிலும் திறந்திருக்கும்.
கடந்த ஆண்டு மே மாதத்தில், சரக்கு மற்றும் சேவை வரிக்கான மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் (GSTAT) முதல் தலைவராக நீதிபதி (ஓய்வு) சஞ்சய குமார் மிஸ்ராவை அரசாங்கம் நியமித்தது.