சரக்கு மற்றும் சேவை வரி வலையமைப்பு ஆனது அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள வணிகங்களைத் துல்லியமாக கண்டறிந்து இடமறிவதற்காக புவியிடக் குறியீட்டு செயல்முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது.
புவியிடக் குறியிடல் துல்லியமான இருப்பிடத் தரவைப் பெற வழி வகுக்கிறது மற்றும் தணிக்கை மற்றும் அமலாக்க முயற்சிகளை மேம்படுத்துகிறது.
இந்த நடவடிக்கையானது போலியானப் பதிவை அகற்றுவது அல்லது வரி ஏய்ப்பவரைக் கண்டுபிடிப்பதை எளிதாக்கும்.
புவியிடக் குறியிடல் என்பது முகவரிகள் அல்லது இருப்பிடங்களுக்குப் புவியியல் கூறுகளை ஒதுக்கும் ஒரு செயல்முறையாகும்.