TNPSC Thervupettagam
November 4 , 2024 68 days 152 0
  • இந்தியாவின் மின் துறையானது மின்சார மோட்டார்கள் (இயக்கிகள்) மற்றும் மின் மாற்றிகளுக்கு அத்தியாவசியமான CRGO எஃகிற்கான 30 சதவீதப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்று உலக வர்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு (GTRI) அறிக்கை தெரிவித்துள்ளது.
  • மின்மாற்றிகள் மற்றும் மின் இயக்கிகள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மிக குளிர்ந்த வெப்பநிலையில் படலங்களாகச் செயல்முறையாக்கப்பட்ட பல்வேறு படிக மூலக்கூறுகளின் அமைவினைச் சார்ந்த (CRGO) பெரும் எஃகுப் பற்றாக்குறையானது இந்தியாவின் உயர் இலட்சிய மிக்க மின் துறை விரிவாக்கத் திட்டங்களைப் பாதிக்கக் கூடும்.
  • உள்நாட்டு உற்பத்தித் தேவையில் 10-12 சதவீதம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுவதால், இந்தியா இறக்குமதியை பெரிதும் சார்ந்துள்ளது.
  • 2024 ஆம் நிதியாண்டில், மிகப்பெரியதொரு CRGO எஃகு நுகர்வோரில் ஒன்றான இந்தியாவிற்கு 400,000 டன்கள் தேவை ஏற்பட்டது.
  • உள்நாட்டில் 50,000 டன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், சீனா, ஜப்பான், ரஷ்யா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து 239.2 ஆயிரம் டன்களை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது.
  • 11.4 ஆயிரம் டன்கள் ஏற்றுமதி செய்ததையடுத்து, உள்நாட்டுப் பயன்பாட்டிற்கு 277.8 ஆயிரம் டன்கள் மட்டுமே கிடைத்ததால், 122.2 ஆயிரம் டன்கள் பற்றாக்குறையாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்