அரபு ஒத்துழைப்புக் குழுவின் (Gulf Cooperation Council-GCC) உறுப்பு நாடுகள் உட்பட மொத்தம் 23 நாடுகள் பங்கு பெறும் Gulf Shield – 1 எனும் இராணுவ கூட்டுப்போர் பயிற்சி அண்மையில் சவூதி அரேபியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் நடைபெற்றுள்ளது.
அரபு பிராந்தியத்தில் நடைபெறும் மிகப்பெரிய ராணுவ கூட்டுப்போர் பயிற்சியான இப்பயிற்சியில் பங்கெடுப்பு நாடுகளின் தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை என அனைத்துப் ஆயுதப்படைகளும் பங்கேற்றுள்ளன.
இக்கூட்டுப் போர் பயிற்சியில் பங்கெடுக்கும் நாடுகளிடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதும், கூட்டுப்போர் பயிற்சி செயல்முறையினை (joint exercise mechanisms) நவீனப்படுத்துவதும், பங்கேற்கும் நாடுகளினுடைய இராணுவ தயார்தன்மையை (military readiness) அதிகரிப்பதும் இக்கூட்டுப்போர் பயிற்சியின் நோக்கங்களாகும்.
இந்த பல்தரப்பு கூட்டுப்போர் பயிற்சியினை சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் நடத்தியுள்ளது.