H3N8 பறவைக் காய்ச்சலால் ஏற்பட்ட உலகின் முதல் மனித மரணம்
April 21 , 2023
586 days
246
- சீனப் பெண்மணி ஒருவர் H3N8 வகை பறவைக் காய்ச்சலால் உயிரிழந்த முதல் நபர் ஆகியுள்ளார்.
- பறவைக் காய்ச்சலின் H3N8 என்ற ஒரு துணை வகையினால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர் இவர் ஆவார்.
- கடந்த ஆண்டில் பதிவான முதல் இரண்டு பாதிப்புகள் உட்பட இந்த 3 பாதிப்புகளும் சீனாவில் மட்டுமே பதிவாகியுள்ளன.
- H3N8 பாதிப்பு மனிதர்களில் அரிதாக இருந்தாலும், பறவைகளில் பெருமளவில் ஏற்படும் பாதிப்பான இதில் நோய்க்கான எந்த அறிகுறியும் இருக்காது.
- இது மற்றப் பாலூட்டி இனங்களையும் பாதித்துள்ளது.
Post Views:
246