உலக உணவு மன்றத்தின் போது 2024 ஆம் ஆண்டு Hand-in-Hand என்ற முன்னெடுப்பு முதலீட்டு மன்றம் ஆனது ரோம் நகரில் நடைபெற்றது.
தற்போது 72 நாடுகள் Hand-in-Hand முன்னெடுப்பில் இணைந்துள்ளன.
Hand-in-Hand முன்னெடுப்பானது இதுவரை சுமார் 3 பில்லியன் டாலருக்கும் மேலான முன்னுரிமை மிக்க வேளாண் முதலீடுகளை ஊக்குவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட HIH முன்னெடுப்பானது உணவு மற்றும் வேளாண் அமைப்பின் முதன்மைத் திட்டம் மற்றும் அதன் மிகவும் முக்கிய முன்னுரிமை திட்டப் பகுதிகளில் ஒன்றாகும்.
வறுமையை ஒழித்தல் (SDG1), பட்டினி நிலை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டினை (SDG2) முடிவிற்குக் கொண்டு வருதல் மற்றும் ஏற்றத்தாழ்வுகளைக் (SDG10) குறைத்தல் ஆகியவற்றின் மூலம் பல்வேறு வேளாண் உணவு முறை மாற்றங்களை விரைவு படுத்துவதற்கான தேசிய அளவிலான மற்றும் இலட்சிய மிக்கத் திட்டங்களை செயல் படுத்துவதற்கான ஆதரவினை இது வழங்குகிறது.