முதன்முறையாக தேசிய விண்வெளி ஆய்வகங்கள் (NAL) நிறுவனமானது இந்தியாவில் பயிற்சி விமானங்களைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பப் பரிமாற்ற ஒப்பந்தத்தில் ஒரு தனியார் நிறுவனத்துடன் கையெழுத்திட்டுள்ளது.
உள்நாட்டிலேயே முழுமையாக வடிவமைக்கப் பட்டு உருவாக்கப் பட்ட ஒரு தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இந்தியாவில் விமானங்கள் தயாரிக்கப் படுவது இதுவே முதல் முறையாகும்.
இரண்டு இருக்கைகள் கொண்ட Hansa-3 NG விமானம் ஆனது, 1998 ஆம் ஆண்டிலிருந்து, NAL நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட HANSA விமானங்களின் சமீபத்திய மறுவடிவம் ஆகும்.
தற்போது, இந்தியாவின் விமானிப் பயிற்சி நிறுவனங்களில் நன்கு பயன்படுத்தப்படும் அனைத்து விமானங்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன.