HD1 எனப் பெயரிடப்பட்ட ஓர் அண்டமானது இதுவரை வானியலாளர்களால் கண்டு பிடிக்கப் பட்ட ஒரு மிக தொலைதூர அண்டமாக இருக்கலாம் என்று கருதப் படுகிறது.
இந்த அண்டத்தின் பிரகாசத் தன்மைக்கு அதன் மையத்தில் இருக்கும் ஒரு பெரிய கருந்துளை காரணமாக இருக்கலாம் அல்லது ஆதியில் தோன்றிய சில மிகப்பெரிய நட்சத்திரங்களின் உருவாக்கம் காரணமாக இருக்கலாம்.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள ஹார்வர்ட்-ஸ்மித்சோனியன் வானியற்பியல் மையத்தின் ஃபேபியோ பக்குசி (Fabio Pacucci) என்பவர் தனது சக ஊழியர்களுடன் இணைந்து HD1 அண்டத்தினைக் கண்டுபிடித்தார்.