July 7 , 2023
506 days
332
- HDFC வங்கி லிமிடெட் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டு நிதி வழங்கீட்டுக் கழகம் ஆகியவற்றின் இணைப்பு ஜூலை 01 ஆம் தேதியன்று நடைபெற்றது.
- இந்த புதிய HDFC வங்கி நிறுவனமானது, சுமார் 120 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும்.
- இது ஜெர்மனியின் மக்கள் தொகையை விட அதிகமாகும்.
- இந்தப் புதிய வங்கி நிறுவனமானது, சுமார் 18 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மொத்தச் சொத்துக்களைக் கொண்டுள்ளது.
- இந்த இணைப்பானது பங்குச் சந்தை மூலதனத்தில் உலக அளவில் நான்காவது இடத்தில் இருக்கும் கடன் வழங்கீட்டு நிறுவனத்தினை உருவாக்குகிறது.
- இது JP மோர்கன் சேஸ் & கோ, சீனத் தொழில்துறை மற்றும் வணிக வங்கி லிமிடெட் மற்றும் பாங்க் ஆஃப் அமெரிக்கா கார்ப்பரேசன் ஆகியவற்றினை அடுத்து உள்ளது.
Post Views:
332