பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் அறிவியலாளர்கள் HE 1005-1439 என்று பெயரிடப்பட்டத் தனித்தன்மை வாய்ந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டு அறிந்துள்ளனர்.
இது கார்பன் செறிந்த மற்றும் குறைந்த உலோக மூலக்கூறுகள் கொண்ட (CEMP) ஒரு நட்சத்திரமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.
இது நட்சத்திர உருவாக்கச் செயல்முறைகள் குறித்தப் புரிதலின் மூலம் வழங்கப்பட்ட முந்தைய வகைப்பாடுகளையும் சவால்களையும் நிவர்த்தி செய்யும்.
இது மேலும் மெதுவான (S-) மற்றும் இடைநிலை (I-) ஆகிய இரண்டு வெவ்வேறு நியூட்ரான்-பிணைப்பு செயல்பாடுகளின் மூலம் உருவாக்கப்பட்டதற்கான பல்வேறு அறிகுறிகளையும் காட்டுகிறது.