உணவு விநியோகத்தில் தொழிற்சாலையால் தயாரிக்கப்பட்ட மாறுபக்க கொழுப்பை (trans-fat) ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையமானது (Food Safety and Standards Authority of India - FSSAI) “Heart Attack Rewind” என்ற ஊடகப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
உலக சுகாதார அமைப்பினால் மாறுபக்க கொழுப்பை ஒழிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட உலக இலக்கு ஆண்டிற்கு முந்தைய ஆண்டான 2022 ஆம் ஆண்டில் அதை ஒழிக்க முற்படும் FSSAI-ன் உலக இலக்கை இந்தியா ஆதரிக்கிறது.
இது FSSAI-ன் குறிக்கோளான “மாறுபக்க கொழுப்பில் இருந்து விடுபடுவது : இந்தியா@75” என்பதுடன் ஒன்றிப் பொருந்துகிறது.