புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கான நிதி நல்கும் நிறுவனமானது (HEFA –Higher Education Financial Agency) உலக தரத்திலான ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஊக்குவிக்க 6 இந்திய கல்வி நிறுவனங்களுக்கு 2000 கோடி அளவிலான வட்டியில்லா கடனை வழங்கிட ஒப்புதல் வழங்கியுள்ளது.
HEFA
HEFA ஓர் வங்கியல்லாத நிதி நிறுவனமாகும் (NBFC – Non Banking Financial Company).
இது நாட்டின் முன்னணி அரசு கல்வி நிறுவனங்களில் உலக தரத்திலான உள்கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சி வசதிகளை ஏற்படுத்துவதற்கு நிதி அளித்து ஊக்குவிக்கும் ஓர் நிறுவனமாகும்.
இந்திய நிறுவனங்கள் சட்டம் 2013-ன் பிரிவு 8-ன் கீழ் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் கனரா வங்கி ஆகிய இரண்டிற்கு இடையேயான கூட்டிணைவால் உண்டாக்கப்பட்ட கூட்டு நிறுவனமாகும் (Joint Venture).
புத்தாக்கங்களையும், ஆராய்ச்சிகளையும் அரசு நடத்தும் உயர் கல்வி நிறுவனங்களில் மேம்படுத்துவதற்கு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் பெருநிறுவன சமுதாய பொறுப்புணர்வு (CSR – Corporate Social Responsibility) மற்றும் சந்தைப்பங்குகள் போன்றவற்றின் மூலம் நிதிகளை திரட்டி கடன் அளிக்கும்.
இது 10 வருட காலத்திற்காக உயர் கல்வி நிறுவனங்களுக்கு நிதி அளிக்கும்.
நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப சந்தையில் பங்குகள் மூலம் நிதி திரட்டுவதற்கு வங்கியல்லாத நிதி நிறுவனமாக HEFA செயல்பட RBI ஆனது RBI சட்டத்தின் கீழ் HEFA-வுக்கு உரிமம் அளித்துள்ளது.