TNPSC Thervupettagam

HEFA – உயர் கல்வி நிறுவனங்கள்

December 1 , 2017 2552 days 836 0
  • புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கான நிதி நல்கும் நிறுவனமானது (HEFA –Higher Education Financial Agency) உலக தரத்திலான ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஊக்குவிக்க 6 இந்திய கல்வி நிறுவனங்களுக்கு 2000 கோடி அளவிலான வட்டியில்லா கடனை வழங்கிட ஒப்புதல் வழங்கியுள்ளது.
HEFA
  • HEFA ஓர் வங்கியல்லாத நிதி நிறுவனமாகும் (NBFC – Non Banking Financial Company).
  • இது நாட்டின் முன்னணி அரசு கல்வி நிறுவனங்களில் உலக தரத்திலான உள்கட்டமைப்பு மற்றும்  ஆராய்ச்சி வசதிகளை ஏற்படுத்துவதற்கு நிதி அளித்து ஊக்குவிக்கும் ஓர் நிறுவனமாகும்.
  • இந்திய நிறுவனங்கள் சட்டம் 2013-ன் பிரிவு 8-ன் கீழ் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • இது மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் கனரா வங்கி ஆகிய இரண்டிற்கு இடையேயான கூட்டிணைவால் உண்டாக்கப்பட்ட கூட்டு நிறுவனமாகும் (Joint Venture).
  • புத்தாக்கங்களையும், ஆராய்ச்சிகளையும் அரசு நடத்தும் உயர் கல்வி நிறுவனங்களில் மேம்படுத்துவதற்கு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் பெருநிறுவன சமுதாய பொறுப்புணர்வு (CSR – Corporate Social Responsibility) மற்றும் சந்தைப்பங்குகள் போன்றவற்றின் மூலம் நிதிகளை திரட்டி கடன் அளிக்கும்.
  • இது 10 வருட காலத்திற்காக உயர் கல்வி நிறுவனங்களுக்கு நிதி அளிக்கும்.
  • நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப சந்தையில் பங்குகள் மூலம் நிதி திரட்டுவதற்கு வங்கியல்லாத நிதி நிறுவனமாக HEFA செயல்பட  RBI ஆனது RBI சட்டத்தின் கீழ் HEFA-வுக்கு  உரிமம் அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்