TNPSC Thervupettagam

HIV நோயிலிருந்து குணமடைந்த ஆறாவது நபர்

July 27 , 2023 360 days 234 0
  • ஜெனீவா நோயாளி என்று குறிப்பிடப்படும் HIV நோயால் பாதிக்கப்பட்ட ஆறாவது நபர், இரத்தப் புற்றுநோய்க்கான ஒரு குருத்தணு மாற்று சிகிச்சையைப் பெற்ற பிறகு HIV நோயிலிருந்து மீண்டுள்ளார்.
  • அவரது HIV எதிர்ப்பு மருந்துச் சிகிச்சை நிறுத்தப்பட்ட 20 மாதங்களுக்குப் பிறகும் அவரது இரத்தத்தில் வைரஸின் அளவு கண்டறியப்படாமல் இருந்தது.
  • இந்த நோயாளிக்கு, 2018 ஆம் ஆண்டில் மோசமான நிலையிலான இரத்தப் புற்று நோய்க்காக அவருக்கு குருத்தணு மாற்று அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
  • இருபது மாதங்களுக்குப் பிறகு, அவரது உடலில் மேற்கொள்ளப்பட்ட HIV சோதனைகளில் வைரஸ் மூலக்கூறுகள், நோய்த்தொற்றின் மறைவான தேக்கப் பகுதிகள் அல்லது வைரஸுக்கு எதிராக அதிகரித்த நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றைக் கண்டறிய முடியவில்லை.
  • இதுவரை HIV நிவாரணச் சிகிச்சை பெற்ற ஆறு நோயாளிகளும், அவர்களின் புற்று நோய்க்கான சிகிச்சைக்காக குருத்தணு மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
  • இருப்பினும், முதல் ஐந்து நோயாளிகளுக்கு, சிகிச்சை வழங்கும் மருத்துவர் குழுக்கள் குறிப்பாக HIV தொற்றினால் அதிகம் பாதிப்பிற்குட்படாத CCR5 டெல்டா 32 பிறழ்வு கொண்ட செல் தானதாரர்களைத் தேடியது.
  • HIV வைரசானது, CD4 நோயெதிர்ப்புச் செல்களைத் தாக்குவதன் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது.
  • பெர்லின் நோயாளி எனப்படும் HIV நோயினால் பாதிக்கப்பட்ட நபர், 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு குருத்தணு மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு HIV நோயிலிருந்து மீண்ட முதல் நபர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்