TNPSC Thervupettagam

HIV நோய்த் தடுப்பு மருந்து CAB-LA

May 25 , 2023 552 days 292 0
  • இந்திய மருந்து உற்பத்தி நிறுவனமான சிப்லா, நீண்டகாலமாகச் செயலில் இருக்கும் காபோடெக்ராவிர் (CAB-LA) என்ற நோய்த்தடுப்பு மருந்தின் பொதுப் பெயர் மருந்து வடிவமானது, ஜோகன்னஸ்பர்க் அல்லது டர்பனுக்கு அருகிலுள்ள பெனோனியில் உள்ள அதன் ஆலைகளில் தயாரிக்கப் படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
  • மலிவு விலையில் கிடைக்கப் பெறும் HIV நோய்த் தடுப்பு மருந்தானது முதல் முறையாக தென்னாப்பிரிக்காவில் தயாரிக்கப்பட உள்ளது.
  • காபோடெக்ராவிர் ஒரு நபரின் செல்களுக்குள் HIV வைரஸ் நுழைவதைத் தடுக்கிறது.
  • இது ஒரு நபர் உடலுறவு மூலம் இந்த வைரசினால் பாதிக்கப்படுவதற்கான பல்வேறு வாய்ப்புகளை முற்றிலும் தடுக்கிறது.
  • CAB-LA மருந்தினை உருவாக்கிய ViiV ஹெல்த்கேர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற மருந்துகள் காப்புரிமைக் குழு (MPP) ஆகியவை சிப்லா உட்பட மூன்று மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியுள்ளன.
  • அரவிந்தோ மற்றும் வியாட்ரிஸ் ஆகிய அந்த மற்ற இரண்டு நிறுவனங்களும் இந்திய நிறுவனங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்