TNPSC Thervupettagam

HIV பற்றிய உலக சுகாதார அமைப்பின் சான்றிதழ்

May 16 , 2024 192 days 225 0
  • பெலிஸ், ஜமைக்கா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் ஆகிய மூன்று சிறிய கரீபியன் நாடுகள் தாயிடமிருந்துக் குழந்தைக்குப் பரவும் HIV மற்றும் சிபிலிஸ் தொற்றுகளை ஒழித்ததற்காக உலக சுகாதார அமைப்பின் சான்றிதழைப் பெற்று உள்ளன.
  • தாயிடமிருந்து குழந்தைக்கு HIV பரவும் விகிதத்தை ஐந்து சதவீதத்திற்கும் குறைவாக குறைத்துள்ள நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பினால் இந்தச் சான்றிதழ் வழங்கப் படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 70,000 குழந்தைகள் உட்பட 2.5 மில்லியன் மக்கள் HIV தொற்றினைக் கொண்டுள்ளனர்.
  • 2022 ஆம் ஆண்டில் சுமார் 66,000 பேர் HIV தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற நிலையில் இது 2021 ஆம் ஆண்டில் இருந்த எண்ணிக்கையினை விட சற்று அதிகம் ஆகும்.
  • 2022 ஆம் ஆண்டில் 32,000 எய்ட்ஸ் தொடர்பான உயிரிழப்புகள் (ஒவ்வொரு மணி நேரத்திற்கும் நான்கு உயிரிழப்புகள்) பதிவாகியுள்ளன.
  • ஆனால் ஓராண்டில் பதிவான ஒட்டு மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கையானது 25 சதவீதம் குறைந்துள்ளது.
  • தாய்ப்பால் கொடுக்கும் போது தாயிடமிருந்துக் குழந்தைக்கு வைரஸ் பரவும் விகிதம் 24.3 சதவீதம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்