TNPSC Thervupettagam

HIV/AIDS தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் திட்டம்

April 13 , 2023 465 days 204 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருள் தொடர்பான புள்ளியியல் ஆணையம் மற்றும் HIV/AIDS தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டுத் திட்டத்தின் திட்ட ஒருங்கிணைப்பு வாரியம் (UNAIDS) ஆகியவற்றின் ஒரு உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • இது ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூகச் சபையினால் தேர்ந்து எடுக்கப் பட்டுள்ளது.
  • அவை ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூகச் சபையின் முக்கியமான துணை அமைப்புகளாகும்.
  • புள்ளியியல் ஆணையம் என்பது சர்வதேசப் புள்ளியியல் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளைக் கையாளுகின்ற ஒரு மிக உயரிய அமைப்பாகும் என்பதோடு புள்ளியியல் துறையில் தரநிலைகளை நிர்ணயிப்பதற்கான ஒரு பொறுப்பினையும் கொண்டுள்ள அமைப்பாகும்.
  • முன்னதாக இந்தியா, 2004 ஆம் ஆண்டில் புள்ளியியல் ஆணையத்தில் உறுப்பினராக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்