பெலிஸ், ஜமைக்கா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் ஆகிய மூன்று சிறிய கரீபியன் நாடுகள் தாயிடமிருந்துக் குழந்தைக்குப் பரவும் HIV மற்றும் சிபிலிஸ் தொற்றுகளை ஒழித்ததற்காக உலக சுகாதார அமைப்பின் சான்றிதழைப் பெற்று உள்ளன.
தாயிடமிருந்து குழந்தைக்கு HIV பரவும் விகிதத்தை ஐந்து சதவீதத்திற்கும் குறைவாக குறைத்துள்ள நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பினால் இந்தச் சான்றிதழ் வழங்கப் படுகிறது.
2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 70,000 குழந்தைகள் உட்பட 2.5 மில்லியன் மக்கள் HIV தொற்றினைக் கொண்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் சுமார் 66,000 பேர் HIV தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற நிலையில் இது 2021 ஆம் ஆண்டில் இருந்த எண்ணிக்கையினை விட சற்று அதிகம் ஆகும்.
2022 ஆம் ஆண்டில் 32,000 எய்ட்ஸ் தொடர்பான உயிரிழப்புகள் (ஒவ்வொரு மணி நேரத்திற்கும் நான்கு உயிரிழப்புகள்) பதிவாகியுள்ளன.
ஆனால் ஓராண்டில் பதிவான ஒட்டு மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கையானது 25 சதவீதம் குறைந்துள்ளது.
தாய்ப்பால் கொடுக்கும் போது தாயிடமிருந்துக் குழந்தைக்கு வைரஸ் பரவும் விகிதம் 24.3 சதவீதம் ஆகும்.