எய்ட்ஸ் நோயை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய நிதியம் ஆனது, இந்தியா உடனான அதன் உத்திசார் கூட்டாண்மையை மையமாகக் கொண்ட முதல் மாநாடு வெற்றிகரமாக முடிவடைந்ததாக அறிவித்துள்ளது.
இது ஒரு அதிநவீன HIV மருந்தின் விலையைக் கணிசமாகக் குறைப்பதற்காக பொதுப் பெயர் வடிவிலான மருந்து உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்கிறது.
இந்த உலகளாவிய நிதியமானது, எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா ஆகியவற்றின் பாதிப்பினை எதிர்த்துப் போரிடுவதற்காக 2002 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு கூட்டாண்மை நிதியமாகும்.
இந்த ஒப்பந்தம் ஆனது TLD எனப்படும் மேம்பட்ட பண்புகள் கொண்ட மாத்திரையை ஒரு நபருக்கு வருடத்திற்கு 45 டாலருக்கும் குறைவான விலையில் கீழ் வழங்கி உதவச் செய்வதைச் சாத்தியமாக்கும்.