தேசிய AIDS கட்டுப்பாட்டு நிறுவனமானது 2017ஆம் ஆண்டிற்கான HIV மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டிற்கான HIV மதிப்பானது தேசிய AIDS கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட HIV மதிப்பீடுகளின் வரிசையில் 14வது சுற்று மதிப்பீடாகும்.
NACO (National AIDS Control Organization) அமைப்பானது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (Indian Council of Medical Research - ICMR) மற்றும் தேசிய மருத்துவப் புள்ளியியல் நிறுவனத்தோடு (National Institute of Medical Statistics- NIMS) இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை HIV மதிப்பீட்டை மேற்கொள்கிறது.
HIV மதிப்பீட்டின் முதல் சுற்று மதிப்பீடானது இந்தியாவில் 1998ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.
இந்தியாவில் தேசிய மற்றும் மாநில/யூனியன் பிரதேச அளவில், HIV நோய்த் தாக்கின் நிலை பற்றிய மேம்படுத்தப்பட்ட தகவல்களை அளிப்பதே HIV மதிப்பீட்டின் நோக்கமாகும்.