TNPSC Thervupettagam

HIV மதிப்பீட்டு அறிக்கை 2017

September 15 , 2018 2268 days 730 0
  • தேசிய AIDS கட்டுப்பாட்டு நிறுவனமானது 2017ஆம் ஆண்டிற்கான HIV மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • 2017ஆம் ஆண்டிற்கான HIV மதிப்பானது தேசிய AIDS கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட HIV மதிப்பீடுகளின் வரிசையில் 14வது சுற்று மதிப்பீடாகும்.
  • NACO (National AIDS Control Organization) அமைப்பானது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (Indian Council of Medical Research - ICMR) மற்றும் தேசிய மருத்துவப் புள்ளியியல் நிறுவனத்தோடு (National Institute of Medical Statistics- NIMS) இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை HIV மதிப்பீட்டை மேற்கொள்கிறது.
  • HIV மதிப்பீட்டின் முதல் சுற்று மதிப்பீடானது இந்தியாவில் 1998ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.
  • இந்தியாவில் தேசிய மற்றும் மாநில/யூனியன் பிரதேச அளவில், HIV நோய்த் தாக்கின் நிலை பற்றிய மேம்படுத்தப்பட்ட தகவல்களை அளிப்பதே HIV மதிப்பீட்டின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்