மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற நபர்களின் பராமரிப்பு மற்றும் அமலாக்கக் கட்டமைப்புக்கான 2024 ஆம் ஆண்டிற்கான மாநிலக் கொள்கையை முதலமைச்சர் வெளியிட்டு ள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற / சில வீடற்ற நபர்களுக்கு (HPWMI) வழங்கப்படும் சேவையை மீட்பு மற்றும் தீவிர நலப் பராமரிப்பு, இடைநிலை பராமரிப்பு, நீண்ட கால பராமரிப்பு மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆகிய நான்கு நிலைகளாக இக்கொள்கை வரையறுக்கிறது.
மீட்பு நடவடிக்கைகளில் பின்பற்ற வேண்டிய ஒரு சீர்தர இயக்க நடைமுறையை (SOP) இந்தக் கொள்கை முன்மொழிகிறது.
அத்தகைய நபர் 18 வயதுக்குட்பட்டவராக இருந்தாலோ, பெண் அல்லது கர்ப்பிணி மற்றும் ஏதேனும் குற்றத்தினால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்தக் கொள்கை விவரிக்கிறது.
மாநில மனநல ஆணையத்தின் (SMHA) தலைமை நிர்வாக அதிகாரி, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை இணைக்க செய்வதற்கான அரசு முதன்மை அதிகாரியாக செயல்படுவார்.
மனநலம் பாதிக்கப்பட்ட வீடற்ற நபர்களை மீட்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு உதவி எண்ணாக 102 செயல்படும்.